செய்திகள் :

Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சுமத்தும் கர்நாடகா அரசு

post image

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கடந்த ஜூன் மாதம் ஆர்.சி.பி அணி ஐ.பி.எல் கோப்பை வென்றதைக் கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகமே காரணம் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அரசு.

ஜூன் 12ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை சீலிட்ட கவரில் வைக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால் ரசியமாக மறைத்து வைக்க சட்டத்தில் அனுமதியில்லை என நீதிமன்றம் மறுத்ததால் ஊடகங்கள் அந்த அறிக்கையை ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளன.

Karnataka High Court
Karnataka High Court

அந்த அறிக்கையில் ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் சமூக வலைதள பதிவுகள், குறிப்பாக உச்ச நட்சத்திரமான விராட் கோலி இருக்கும் வீடியோ குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெற்றி ஊர்வலம் நடைபெற்ற ஜூன் 4 அன்று காலை 7:01 மணிக்கு பெங்களூரு பெருநகர காவல்துறையிடம் எந்தவொரு ஆலோசனையும் அனுமதியும் பெறாமல் இலவசமாக ரசிகர்கள் வெற்றிவிழாவில் பங்கெடுக்கலாம் என்ற பதிவை வெளியிட்டுள்ளது ஆர்.சி.பி அணி நிர்வாகம்.

அந்த பதிவில் விதனசவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை வெற்றி ஊர்வலம் நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

"இந்த வெற்றியை பெங்களூரு நகர மக்களுடன் கொண்டாட அணி திட்டமிட்டுள்ளது" என விராட் கோலி கூறும் வீடியோவையும் ஆர்.சி.பி நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

சித்தராமையா, டி.கே.எஸ்.சிவக்குமார்

மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்ட அன்று பிற்பகல் 3.14 மணிக்கு ஆர்.சி.பி, வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே இலவச பாஸ்கள் உள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. ஆனால் காலை முதல் பல்வேறு சமூக வலைதள பதிவுகள் மூலம் வெற்றி ஊர்வலம் குறித்து அறிந்த மக்கள் குவியத்தொடங்கிவிட்டனர் எனக் கூறிய அறிக்கையில், விமான நிலையத்திலிருந்து அணியின் ஹோட்டலான தாஜ் வெஸ்ட் எண்டிற்கு செல்லும் வழியில் மக்கள் கூடியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

"விழாவை நடத்தியவர்களிடம் சரியான திட்டமிடல் இல்லாததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தேவையான தகவல்களை வழங்கத் தவறியதும்" தான் ஏற்கெனவே மைதானத்தைச் சுற்றி கூடுதல் காவலர்களை நிறுத்த வேண்டிய நிலைக்கு காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊர்வலம் நடப்பதற்கு முந்தைய தினம், ஜூன் 3 ஆம் தேதி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சார்பாக, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான DNA நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஊழியர் ஒருவர், RCB/DNA நிர்வாகம் மைதானத்தில் வெற்றி அணிவகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு கடிதத்தை காவல்துறையில் சமர்ப்பித்துள்ளார். ஆனால், அதில் தேவையான தகவல்களும் எந்த விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்படாததால், கப்பன் பார்க் நிலைய காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்
ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்

ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகமே, சின்னசாமி ஸ்டேடியத்தின் 1, 2 மற்றும் 21 வாயில்கள் வழியாக கூட்டம் நுழையக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. 3.30 மணியளவில், 2, 2a, A, 6, 7, 15, 17, 18, 20 மற்றும் 21 வாயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில் ஒரு டிசிபி நிலை அதிகாரி உட்பட ஏழு காவல்துறையினரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிகழ்வை உடனடியாக ரத்து செய்தால் கும்பல் வன்முறை ஏற்படும் என்பதனால் 5:30 மணிக்குத் தொடங்கி குறைந்த நேரத்தில் முடிக்கத் திட்டமிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இத்துடன் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள், காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் ஆகிய விவரங்களையும் அறிக்கையில் எடுத்துரைத்துள்ளனர்.

மேலும், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் வசதி, காவல்துறை செயல்பாடுகள் குறித்து் நீதிமன்றம் எழுப்பிய பல கேள்விகளுக்கு அறிக்கையில் பதிலளிக்கப்பட்டிருந்தது.

திண்டுக்கல் சட்ட விரோத குவாரிகள்: "அதிகாரிகளின் கூட்டுச் சதியா?" - உயர்நீதிமன்றம் கேள்வி

குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று, சட்டவிரோதக் குவாரிகள் மீதான வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட தகவலால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆ... மேலும் பார்க்க

`வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி; ஆதார் ஏன் இல்லை?’ - உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி | முழு விவரம்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே வாக்காளர் இறுதிப்பட்டியலை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. பிறகு திடீர் அறிவிப்பாக அனைத்து வ... மேலும் பார்க்க

நெல்லை: `ஆதரவற்ற பாட்டியின் வீட்டை மீட்டுக்கொடுத்த காவல்துறை' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த போலீஸார்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. 70 வயதான இம்மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது ஆதரவற்ற நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ரொக்கமாகவும் காசோலை மூலம... மேலும் பார்க்க

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞர்: 4 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்! - என்ன நடந்தது?

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா இதே வழக்கில் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

தேனி: லஞ்சம், முறைகேடான சொத்து... அரசு டாக்டருக்கு எதிராக மனு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சொப்ன ஜோதி, தன் கணவருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன... மேலும் பார்க்க