செய்திகள் :

குன்றத்தூர் அபிராமிக்கு சாகும்வரை சிறை - திருமணம் மீறிய உறவுக்காக குழந்தைகள் கொலை; தீர்ப்பு விவரம்

post image

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30.) இவரின் மனைவி அபிராமி (25). இந்தத் தம்பதியினிருக்கு அஜய் (6) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

குழந்தைகள் கொலை

அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மாஸ்டர் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்தநிலையில் கடந்த 2018-ல் அஜய், கார்னிகா ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அபிராமி தலைமறைவாகியிருந்தார்.

இதுகுறித்து விஜய், குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் தெரியவந்தது. அதோடு அவர்களின் முகத்தை தலையணையால் அமுக்கியிருந்ததும் ரிப்போர்ட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

குன்றத்தூர் அபிராமி

இதையடுத்து குன்றத்தூர் போலீஸார் அபிராமியைத் தேடினர். அப்போது அவர் பேருந்தில் தென்மாவட்டத்துக்கு பயணம் செய்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியைப் பிடித்து விசாரித்தபோது பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரத்துக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜராகி வந்தார். குன்றத்தூர் போலீஸார், குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ததோடு சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனால் இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடந்து வந்தது.

`கருணை எதுவும் காட்ட முடியாது’

குறுக்கு, சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (24-7-2025) நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார். இதற்காக சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி செம்மல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

அடுத்து தீர்ப்பின் விவரத்தை நீதிபதி செம்மல் வாசித்தார். அப்போது அபிராமி, எனக்கு வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள். 7 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டேன். அதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, `குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு கருணை எதுவும் காட்ட முடியாது. அதனால் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன்’ என தீர்ப்பளித்தார். அதைக்கேட்ட அபிராமி நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அபிராமியையும் மீனாட்சி சுந்தரத்தையும் போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்

விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு சாதகமான மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூல... மேலும் பார்க்க

Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சுமத்தும் கர்நாடகா அரசு

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கடந்த ஜூன் மாதம் ஆர்.சி.பி அணி ஐ.பி.எல் கோப்பை வென்றதைக் கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகமே காரணம... மேலும் பார்க்க

திண்டுக்கல் சட்ட விரோத குவாரிகள்: "அதிகாரிகளின் கூட்டுச் சதியா?" - உயர்நீதிமன்றம் கேள்வி

குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று, சட்டவிரோதக் குவாரிகள் மீதான வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட தகவலால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆ... மேலும் பார்க்க

`வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி; ஆதார் ஏன் இல்லை?’ - உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி | முழு விவரம்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே வாக்காளர் இறுதிப்பட்டியலை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. பிறகு திடீர் அறிவிப்பாக அனைத்து வ... மேலும் பார்க்க

நெல்லை: `ஆதரவற்ற பாட்டியின் வீட்டை மீட்டுக்கொடுத்த காவல்துறை' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த போலீஸார்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. 70 வயதான இம்மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது ஆதரவற்ற நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ரொக்கமாகவும் காசோலை மூலம... மேலும் பார்க்க

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞர்: 4 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்! - என்ன நடந்தது?

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித... மேலும் பார்க்க