சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!
5 போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!
புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் விமானங்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐந்து போயிங் 737 விமானங்களைச் இணைப்பதற்கான குத்தகை ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டதாகவும், அவை அக்டோபரில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் குளிர்காலம் மற்றும் கோடைகாலத்தின் தொடக்கத்திற்கும் ஏற்றவாறு செயல்படும்.
அதே வேளையில் நிறுவனம் தனது விமானக் குழுவை மேலும் மேம்படுத்தவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை வலுப்படுத்தவும் மற்ற குத்தகைதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பல சவால்களைச் சந்தித்து வந்த இந்த பட்ஜெட் விமான நிறுவனம், போயிங் 737 மற்றும் Q-400 விமானங்களை இயக்கி வருகிறது.
விமானக் குழு கண்காணிப்பு வலைத்தளமான Planespotters.net இல் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஜூலை 24 ஆம் தேதி நிலவரப்படி, விமான நிறுவனத்திடம் 20 விமானங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில் 33 விமானங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 2.40 சதவிகிதம் சரிந்து ரூ.38.27 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!