ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை; செப்.14-ல் இந்தியா - பாக். மோதல்!
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!
தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாக முதல்வர் கொடுத்து அனுப்பியுள்ளார்.
தலைமைச் செயலாளிடம் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டு, அதை பிரதமர் மோடியிடம் வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலை தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 26, 2025
மாண்புமிகு @TThenarasu அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார். pic.twitter.com/Nf9494NR2m
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் பிரதமரிடம் வழங்குவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி நாளை(ஜூலை 27) செல்கிறார்.