பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்
பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்படும் ‘எம்பையர் ரெஸ்டாரண்ட்’-க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் காந்திநகர் பிரிவு கிளையில் விற்கப்பட்ட சிக்கன் கெபாப்ஸ் சாப்பிட உகந்தது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அம்பரிஷ் கௌடா நடத்திய ஆய்வில் மேற்கண்ட உணவகத்திலிருந்த சிக்கன் கெபாப்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படன. அதில், ‘தரமற்ற உணவு இது’ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் சிக்கன் கெபாப்ஸ் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006-இன்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள தரத்தில் இல்லை என்பதால் பாதுகாப்பற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.