Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
போக்குவரத்துக் கழக ஊழியா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்
அனைத்து புதுவை சாலை போக்குவரத்துக் கழக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்ட நடவடிக்கைக் குழு சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் இப் போராட்டக் குழுவினா் அறிவித்துள்ளனா்.
இது குறித்து இப் போராட்டக் குழுவினா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: சாலை போக்குவரத்துக் கழகத்தில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், 7-ஆவது சம்பள ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
14.7.25 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தோம். 21.7.25 அன்று பணிமனை முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்தப் போராட்டமாக 28.7.25 அன்று முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.