செய்திகள் :

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

post image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைகளின் பாதுகாப்பு கருதி வெள்ளநீர் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது.

இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை வினாடிக்கு 45,400 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, காலை 8 மணியளவில் வினாடிக்கு 60,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 60,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி நீரும் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 42,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்றாவது நாளாக 120அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

உபரிநீர் கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் உபரி நீர் கால்வாயில் இரு கரைகளிலும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய் துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதேபோல டெல்டா மாவட்டங்களில் காவேரி கரையோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை மேட்டூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

வெள்ள நீர் அருகே குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை குளிப்பாட்ட செல்லக் கூடாது, செல்பி எடுக்கவோ புகைப்படம் எடுக்கவோ செல்லக்கூடாது என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். காவிரியின் இரு கறைகளிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் தீயணைப்பு படை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டதின் பேரில் 60 பேர் கொண்ட 2 குழுக்கள் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மீட்புப் உபகரணங்களுடன் செல்கின்றனர். இவர்கள் ஈரோடு மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உள்ளனர்.

இதையும் படிக்க:பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?

Mettur Dam water level reaches full capacity

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனு குறித்து முதல்வர் ஸ்டாலின்!

மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை... மேலும் பார்க்க