கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார்.
சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8 கி.மீ. தூரத்துக்கு சாலைப்பேரணி நடைபெறுகிறது.
திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள பொன்னேரியில் பிரதமர் மோடி வந்திறங்கினார்.
அங்கு அவரை பாஜக பிரமுகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் புறப்பட்டார். அங்கிருந்து சாலை வழியாக காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை சுமார் 3.8 கி.மீ. தூரத்துக்கு சாலைவலம் மேற்கொள்ளவுள்ளார்.
இரு வழிகளிலும் பாஜக, அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சிக் கொடியுடன் குவிந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.