கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார்.
கோயிலில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து அவருக்கு பிரசாதத்தை வழங்கினர். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் வந்த மோடிக்கு ஓதுவார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.