கர்ஜிக்கும் சிங்கம்... டிம் டேவிட் பாணியில் கொண்டாடிய ஆஸி. வீரர்கள்!
தடை செய்யப்பட்ட மெஸ்ஸி..! டிராவில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்!
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி இல்லாமல் விளையாடிய இன்டர் மியாமி அணியின் ஆட்டம் சமனில் முடிந்தது.
அமெரிக்காவின் சேஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் சின்சினாட்டி அணியும் மோதின.
எம்எல்எஸ் தொடரில் தொடரின் ஆல்ஸ்டார் போட்டியில் பங்கேற்காததால் மெஸ்ஸி, ஜோர்டி ஆல்பா இருவரும் ஒரு போட்டியில் விளையாட தடைசெய்யப்பட்டார்கள்.
அதனால், மெஸ்ஸி, ஆல்பா இல்லாமல் விளையாடிய இன்டர் மியாமி அணி வெற்றி பெற தவறியது.
தவறிழைத்த இன்டர் மியாமி
இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடைசி வரை கோல் அடிக்காமல் 0-0 என சமனில் முடிந்தது.
இன்டர் மியாமி அணி 57 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இலக்கை நோக்கி 8 முறை பந்தினை அடித்தாலும் ஒன்றுகூட கோல் ஆக மாறவில்லை.
14 பௌல்களை செய்த இன்டர் மியாமி அணியினர் 4 மஞ்சள் (எல்லோ கார்டு) அட்டைகளைப் பெற்றார்கள்.
புள்ளிப் பட்டியலில் இன்டர் மியாமி அணி 42 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.
50 புள்ளிகளுடன் பிலடெல்பியா யூனியன் முதலிடத்தில் இருக்கிறது.
குறைவான போட்டிகள்இன்டர் மியாமி அணி விளையாடியுள்ளதால் ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்எல்எஸ் புள்ளிப் பட்டியல்
1. பிலடெல்பியா யூனியன் - 50 புள்ளிகள் (25 போட்டிகள்)
2. சின்சினாட்டி - 49 புள்ளிகள் (25 போட்டிகள்)
3. நாஷ்வில்லி - 47 புள்ளிகள் (25 போட்டிகள்)
4. கொலம்பஸ் - 44 புள்ளிகள் (25 போட்டிகள்)
5. இன்டர் மியாமி - 42 புள்ளிகள் (22 போட்டிகள்)