ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்: விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி சினிமாவுக்கு ஏன் வந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதுடன் இந்தியளவில் அறியக்கூடிய நடிகராகவும் இருக்கிறார்.
தற்போது, இவர் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நான் எல்லா தொழில்களையும் செய்து பார்த்தேன். எதுவும் சரியாகக் கைகூடவில்லை. துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது அதிக சம்பளம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் செல்ல முயற்சித்தேன். பின், சென்னை வந்து சில வேலைகளைச் செய்தேன்.
பின், சினிமாவுக்குப் போனால் நல்ல வருமானம் கிடைக்கும் என நடிப்பைக் கற்றுக்கொள்ள கூத்துப்பட்டறை சென்றேன். ஆனால், கணக்காளர் பணிதான் கிடைத்தது. அங்கிருந்தே சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மாதம் ரூ. 1 லட்சம் சம்பாத்தித்தால் போதும் என்கிற ஆசையால்தான் சினிமாவுக்கு வந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கங்கைகொண்ட சோழபுரத்தில் பண்ணைபுரம்!