உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
கங்கைகொண்ட சோழபுரத்தில் பண்ணைபுரம்!
இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சிக்காக கங்கை கொண்ட சோழபுரம் வந்தடைந்தார்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா்.
அங்கு, முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா தன் குழுவினருடன் திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.

அதற்காக, இன்று கங்கை கொண்ட சோழபுரம் வந்ததாக புகைப்படம் வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?