நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்
நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி பலியானார்.
மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் மேலும் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் மற்றும் காரில் இருந்தவர் என இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒபாமாவை விடாமல் துரத்தும் டிரம்ப்! ஏஐ சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை!
கைதானவர்கள் நொய்டாவைச் சேர்ந்த யாஷ் சர்மா (22), அபிஷேக் ராவத் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் ஹரியாணா பதிவு எண்ணைக் கொண்ட பிஎம்டபிள்யூ காரும் பறிமுதல் செய்யப்பட்டது. சிறுமி தனது தந்தை மற்றும் மாமாவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.