ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றன. ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் மஹுவா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை அறிவித்துள்ளார். முன்னதாக, தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு பதிவை வெளியிட்டாா்.
அதில், ‘ஓா் இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக’ பதிவிட்ட அவா், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா். இது பிகாரில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்குவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தார்.
இனி கட்சி, குடும்பத்துடன் அவருக்கு எந்தத் தொடா்பும் கிடையாது. அவா் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா் என்று குறிப்பிட்டார். 2015 முதல் 2020 வரை பேரவைத் தேர்தலில் மஹுவா தொகுதி தொகுதியில் போட்டியிட்ட தேஜ் பிரதாப் 2020-ல் தொகுதி மாறி ஹசன்பூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இருப்பினும் தற்போதும் மஹுவா தொகுதி ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.