இசைவெளியீட்டு விழாவில் ரஜினி இதைக் குறிப்பிடுவார்: லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவதுடன் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது, படத்தின் புரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் நேர்காணல்கள் அளித்து வருகிறார்.
அப்படி, நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ், “நான் ரஜினி சாருக்கு கதை சொல்லும்போதே, என்னை கமல்ஹாசன் ரசிகன் என்று சொல்லித்தான் ஆரம்பித்தேன். அப்போது, அவர் ஒன்றும் சொல்லவில்லை.
கூலி படத்தின் டப்பிங் முடிந்ததும் என் உதவி இயக்குநர்களிடம், ‘லோகேஷ் கமல் ரசிகர் எனச் சொல்லித்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவரை இசைவெளியீட்டு விழாவில் பார்த்துக் கொள்கிறேன்’ என நகைச்சுவையாகக் கூறி சென்றார். அதனால், இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி என்ன பேசப்போகிறார் என்பதில் பயம் கலந்த ஆர்வம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்: விஜய் சேதுபதி