பெருமைமிகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்
தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
திருச்சியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி தில்லி புறப்பட்டார்.
மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்றைய இரவு நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து பிரதமர் பேசினார். பின்னர், இரவு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார்.
சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றார். அங்கு நடைபெற்ற மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முடிந்து அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருச்சி கிளம்பினார். இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் தலைநகர் தில்லி புறப்பட்டார்.