Sister Hong: 1600 -க்கும் மேற்பட்ட ஆண்கள்; பாலியல் வீடியோவை விற்ற நபர் கைது - தொடரும் சிக்கல்
சீனாவின் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'சிஸ்டர் ஹாங்' விவகாரம். இந்த விவகாரம் வெளியானதிலிருந்து விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
சிஸ்டர் ஹாங் எனும் பெயரில் இருக்கும் ஒருவர் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களைச் சந்தித்து பாலியல் உறவில் இருந்திருக்கிறார். அதை அவர்களின் அனுமதி இல்லாமல் படம் பிடித்து சில சமூக ஊடகங்களுக்கு விற்றிருக்கிறார். அந்த வீடியோக்களில் சில, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சிஸ்டர் ஹாங்-கை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தது.
அப்போதுதான் சிஸ்டர் ஹாங் என்பவர் பெண்ணே அல்ல. அவர் பெண் போல வேடமிட்டு, மேக்கப், விக் என சகலமும் அணிந்து ஆண்களை ஏமாற்றியிருக்கிறார். 38 வயதான அவரை காவல்துறை கைது செய்திருக்கிறது. டேட்டிங் செயலிகள், ஆன்லைன் சமூக ஊடகங்கள் மூலம் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கான ஆண்களை சந்தித்திருக்கிறார். ஒரு தகவலின்படி சுமார் 1600 ஆண்களை அவர் சந்தித்து வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோக்களை காண வேண்டுமானால் 150 யுவான் (21 டாலர்) பணம் வசூலித்திருக்கிறார். வெளியான வீடியோவால் பாதிக்கப்பட்டவர்கள் அறிமுகமானவர்களாலும், மனைவிகளாலும், காதலிகளாலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் விளைவாக விவாகரத்து தாக்கல்கள் உட்பட தனிப்பட்ட விளைவுகள் அதிகரித்திருக்கின்றன. இந்த விவகாரத்தால் தனியுரிமை கடுமையாக மீறப்படுவதைக் காரணம் காட்டி, அந்த வீடியோகளை பகிர்வதை நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.