செய்திகள் :

தேனியில் மணல் திருட்டு விவகாரம் - புகார் கொடுக்கும் உரிமை யாருக்கு? - குழப்பத்தில் அதிகாரிகள்

post image

தேனி கொடுவிலார்பட்டி பாண்டியராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் தேனி தாசில்தார் சதீஷ்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் கடந்த வியாழக்கிழமையன்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த தென்னந்தோப்பில் 20-க்கும் மேற்பட்ட மணல் குவியல்கள் இருந்தன. அவற்றில் சுமார் 30 யூனிட் ஆற்று மணல் இருந்தது. தேனியில் ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை இருக்கும் நிலையில் இவ்வளவு மணலும் யாரால் எங்கிருந்து அள்ளப்பட்டது என விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த மணலைக் கைப்பற்றி தேனி தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். மணல் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டாலும் யார் மீதும் இரண்டு நாட்களாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது சர்ச்சையானது. மணல் இருந்தது தெரியாமால் அதனை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தும் வேலைகளை மட்டுமே மறைமுகமாக செய்து வந்தனர்.

மூல வைகை ஆற்றின் தற்போதைய நிலை

தென்னந்தோப்பில் பதுக்கி வைத்த ஆற்று மணலை நேரடியாக சென்று கைப்பற்றிய தாசில்தார் சதிஷிடம் விளக்கம் கேட்டோம், "மணல் இருப்பது கண்டுபிடிக்கபட்ட தோட்டம் ஞானசேகரன் என்பவருக்குச் சொந்தமானது. ஞானசேகரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிவபெருமாள் என்பவருக்கு லீசுக்கு விட்டிருந்தார். அவர் தான் இவ்வளவு மணலையும் வாங்கி தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தார் என ஒப்புக் கொண்டார். ஆனால் யாரிடமிருந்து இந்த மணல் வாங்கினார் என்பதை அவர் சொல்ல மறுக்கிறார். இந்த மணலை பொதுப்பணித்துறையினர் தான் கைப்பற்ற வேண்டும். அவர்கள் இரண்டு நாள்களாக எடுக்காததால் நான் கைப்பற்றினேன். ஆற்று மணல் என்பதால் பொதுபணித்துறையினர் தான் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மூலவைகை ஆற்றின் தற்போதைய நிலை

மணல் திருட்டு குறித்து பொதுபணித்துறை (PWD) உதவிப் பொறியாளர் ஆரிப் பேசும்போது," மணலை தாசில்தார் கைப்பற்றியுள்ளார். இனிமேல் ஆற்றில் மணல் அள்ளாதவாறு தீவிரமாகக் கண்காணிப்போம் என்றார் ". தற்போது மணல் அள்ளியதற்கு ஏதேனும் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனக் கேட்டதற்கு, "தாசில்தார்தான் மணலைக் கைப்பற்றினார் அவர்தான் புகார்கொடுத்து வழக்குப் பதிய வேண்டும்" எனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

மணல் திருட்டு உறுதியானாலும் யார் மீதும் புகார் தெரிவிக்காமல் தப்பிக்கும் அதிகாரிகளால் அரசின் மீதும் சட்டத்தின் மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

பீகார்: ஊர்க்காவல் படை தேர்வில் மயக்கமடைந்த பெண்; ஆம்புலன்ஸில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள போதிகயா என்ற இடத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்பட்டத... மேலும் பார்க்க

கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை' - 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க