செய்திகள் :

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

post image

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் செளமியாவை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார். படுகாயம் அடைந்த செளமியா திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி மரணமடைந்தார். அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட கோவிந்தசாமி மீது தமிழ்நாட்டிலும் சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. வன்கொடுமை செய்து பெண்ணை கொன்ற வழக்கில் கோவிந்தசாமிக்கு கோர்ட் மரண தண்டனை விதித்தது. 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் கோவிந்தசாமியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார் கோவிந்தசாமி. இந்த நிலையில் சிறையில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் தப்பிச் சென்றார் கோவிந்தசாமி. போலீசார் தீவிர தேடுதலுக்கிடையே பொதுமக்கள் உதவியுடன் சில மணி நேரங்களிலேயே கைதுசெய்யப்பட்டார் கோவிந்தசாமி. பொதுமக்கள் பார்த்ததைத் தொடர்ந்து ஒரு வீட்டு கிணற்றுக்குள் குதித்து பதுங்கியிருந்த கோவிந்தசாமியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை கண்ணூர் சிறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

சிறை காம்பவுண்ட் சுவரில் கயிறுபோன்று கட்டப்பட்டிருந்த துணி

போலீஸ் விசாரணையில் குற்றவாளி கோவிந்தசாமி தப்பித்தது எப்படி என தெரியவந்துள்ளது. சிறைச்சாலையில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் இருந்து சில உபகரணங்களை மறைத்து எடுத்துச் சென்று செல்லில் உள்ள கம்பிகளை கடந்த ஒன்றரை மாதங்களாக வெட்டியுள்ளார். வெட்டிய பகுதிகள் வெளியே தெரியாமல் இருக்க துணிகளை போட்டு மறைத்துள்ளார். கம்பிகளை உடைத்து வெளியே சென்ற கோவிந்தசாமி துணிகளை கிழித்து ஒன்றோடு ஒன்றை முடிச்சுபோட்டு கயிறுபோன்று தயார் செய்துள்ளார். பின்னர் பேரல்கள் மற்றும் பால் கேன் ஆகியவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து சிறையின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி துணிக்கயிற்றை பயன்படுத்தி வெளியே குதித்துள்ளார். தப்பிச் சென்ற பிறகு குருவாயூர் கோயிலுக்குச் சென்று கொள்ளையடிக்கும் திட்டம் வைத்திருந்ததாகவும். அந்த பணத்துடன் வேறு மாநில்த்துக்கு தப்பிச் செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கோவிந்தசாமி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என தெரியாமல் தேடி நடந்தபோது பொதுமக்கள் கண்ணில் பட்டதால் கோவிந்தசாமி போலீஸில் சிக்கியுள்ளார்.

கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட கோவிந்தசாமி

ஆயுள் தண்டனை கைதியை கடும்காவல் மிகுந்த செல்லில் அடைத்துவைத்திருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கை மட்டுமே உள்ள கோவிந்தசாமி சுமார் ஏழரை மீட்டர் உயரமுள்ள சிறைச்சாலை மதில் சுவர் ஏறிகுதித்து தப்பியிருக்கிறார். அதிலும் இன்று காலை கைதிகளை கணக்கெடுத்தபோது அனைவரும் இருப்பதாகவே முதலில் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை காம்பவுண்ட் சுவரில் கயிறுபோன்று துணி கட்டப்பட்டிருப்பதை பார்த்தபிறகு சந்தேகத்தில் மீண்டும்  சோதனை செய்தபோதுதான் கோவிந்தசாமி தப்பிச்சென்றது தெரியவந்தது. கண்ணூர் மத்தியச்சிறை அதிகாரிகளின் அஜாக்கிரதைதான் குற்றவாளி கோவிந்தசாமி தப்பிச்சென்றதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவிந்தசாமியை விய்யூர் மத்திய சிறைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க