செய்திகள் :

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

post image

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது நான்கரை வயது குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

அவரும், குழந்தைக்கு பல விதவிதமான ஆடைகள் போட்டு ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டட வேலைக்கு சித்தலாக சென்று வந்த நிலையில் அவருடன் கட்டட வேலை செய்து வரும் வசந்த் என்பவர் உடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மதியம் அவரது நான்கரை வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த தமிழரசியை பிடித்து வந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும் அப்போது தான் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தமிழரசி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் தமிழரசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அவர் வசித்து வரும் இருகூர் பகுதிக்கு நேரில் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, சென்னை குன்றத்தூரில், திருமணத்தை மீறிய உறவுக்காக, பிள்ளைகளைக் கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இதுபோன்ற ஒரு கொலைச் சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தூத்துக்குடியில் பிரதமர் மோடி !

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். தனி விமானத்தில் தூத்துக்குடி வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தவெகவினருக்கு கட்சித் தலைமைக்கழகம் முக்கிய உத்தரவு!

தவெக கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று கட்சித் தலைமைக்கழம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து கட்சியின் பொதுச்செயல் என்.ஆனந்த் வெளியிட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி!

மாலத்தீவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார். அவர் இன்றிரவு 8 மணியளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 18 ஆம் தேதியன்று, மது... மேலும் பார்க்க

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நான... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜ... மேலும் பார்க்க