செய்திகள் :

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

post image

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில், 2023-ல் நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உயிரிழந்த மாணவரின் தந்தை வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்திலும் வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வு, தேர்வு காரணமாக ஏற்படும் அழுத்தம், கல்வி நிறுவனங்கள் வழங்கத் தவறும் ஆதரவு ஆகிய காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறினர்.

தொடர்ந்து, இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரையில், மாணவர் தற்கொலைகளைத் தடுக்க சில வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

  • மாணவர்களின் பெற்றோருக்கான விழிப்புணர்வு மற்றும் மனநலக் கல்வி

  • மாணவர்களிடம் தேர்வு தொடர்பான பயம், அழுத்தம் முதலானவற்றை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • தேர்வு நேரங்களின்போது, மாணவர்களுக்கு உரிய ஆதரவளிக்கக் கூடிய முறையான பயிற்சிபெற்ற வழிகாட்டிகள் அல்லது ஆலோசகர்கள் நியமித்தல்

  • மாணவர்களுக்கான குறைதீர் முகாம்கள்

  • கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகள், விடுதிகள், பொது இடங்களிலும் தற்கொலைக்கு எதிரான தடுப்பு எண்கள் வைத்தல்

  • கல்வி நிறுவனங்களில், பாதிக்கப்படக்கூடிய அல்லது பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் தொடர்ந்து கண்காணிப்புடன்கூடிய கலந்துரையாடலும் இருத்தல் மற்றும் கலந்துரையாட ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்தல்

  • ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் ஆண்டுதோறும் இருமுறையாவது மனநல பயிற்சிக்கு செல்லுதல்

  • தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒரு தனிக்குழு அமைக்கப்பட வேண்டும்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இதையும் படிக்க:புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!

Student suicides: Supreme Court issues comprehensive guidelines for prevention

பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜலாவா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

மோடி - டிரம்ப் நட்பு வெற்றுத்தனமானது: காங்கிரஸ் விமா்சனம்

‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது; டிரம்ப்பின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் இது நிரூபணமாகி வருகிறது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த... மேலும் பார்க்க

இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமான நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் ... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தின் புதிய படைப்பிரிவு ருத்ரா!

ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள் மற்றும் வீரா்கள் என அனைத்தும் ஒரே குடையின்கீழ் இயங்கும் விதமாக இந்திய ராணுவத்தில் ‘ருத்ரா’ என்ற புதிய படைப்பிரிவை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்... மேலும் பார்க்க

குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்காதது ‘அபத்தமானது’: உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது ‘அபத்தமானது’ என்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாய... மேலும் பார்க்க

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சத்தீஸ்கா் மா... மேலும் பார்க்க