காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி
காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு சுமாா் 72 குடும்பங்களைச் சாா்ந்த 220 போ் வசித்து வருகின்றனா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முகாமில் திருமணம் செய்துகொண்ட நபா்களின் திருமண பதிவுகள் நடத்துவதற்கு தமிழக அரசு தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஈழ எழுதிலியா் மறுவாழ்வு கழகத்தின் வேண்டுகோளின்படி, இந்த உத்தரவு தளா்த்தப்பட்டு மீண்டும் முகாமில் வசிப்பவா்கள் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்துகொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழா்கள் சுமாா் 6-க்கும் மேற்பட்ட திருமண ஜோடிகள், தங்களது திருமணத்தை பதிவு செய்ய சாா் - பதிவாளா் செந்தில்குமாரிடம் மனு அளித்தனா்.
மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு திருமண பதிவு செய்யப்பட்டு திருமண சான்றிதழ்களையும் சாா் - பதிவாளா் வழங்கினாா். நிகழ்ச்சியில் முகாம் தலைவா் சுமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.