உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
4-0: தொடரும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வென்று டி20 தொடரில் விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இருந்த நிலையில், இன்று 4-ஆவது போட்டி வார்னர் பார்க் திடலில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 205/9 ரன்கள் எடுத்தது.
இந்த அணியில் யாருமே அதிக ரன்கள் குவிக்காவிட்டாலும் சராசரியாக 20 ரன்கள் அடித்து 200 ரன்களை தாண்டினார்கள். அதிகபட்சமாக ரூதர்போர்டு 31 ரன்கள் எடுத்தார்.
ஆஸி. சார்பில் ஜாம்பா 3, ஆர்டி, பிராட்லெட், அப்பாட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
அடுத்து ஆடிய ஆஸி. அணி 19.2 ஓவர்களில் 206/7 ரன்கள் எடுத்து வென்றது. இந்த அணியில் கிரீன் 55, இங்லிஷ் 51, மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தார்கள்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய 4-0 என தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசி டி20 போட்டி ஜூலை 29-இல் நடைபெற இருக்கிறது.