5-ஆம் நாளில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார்: பேட்டிங் பயிற்சியாளர்
காயமடைந்த ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுலகர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.
நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் வேட்டை நடத்தியதல் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/2 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணி 137 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், டிராவை நோக்கி செல்லலாம். இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை தடுக்க இந்தியா இன்று முழுவதும் பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஓக்ஸ் வீசிய பந்தில் முழங்காலில் ரிஷப் பந்துக்கு காயம் ஏற்பட்டது.
ரிடையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினாலும், மீண்டும் வந்து பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார்.
ஃபீல்டிங் செய்யாவிட்டாலும் போட்டியின் ஐந்தாம் நாளில் தேவை ஏற்பட்டால் பேட்டிங் செய்வார் என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறியுள்ளார்.