செய்திகள் :

மறுமணம் செய்து கொண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்? - வைரலாகும் ஆடை வடிவமைப்பாளரின் பதிவு!

post image

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். தற்போது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் வருகிறார். பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டுத் திருமணங்களுக்கு இவரது சமையலைத்தான் புக் செய்கின்றனர்.

இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ரங்கராஜ் –ஸ்ருதி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரங்கராஜ் - ஜாய்

இந்நிலையில் ரங்கராஜின் ஆடை வடிவைப்பாளர் ஜாய் கிறிசில்டா, ரங்கராஜ்தான் தன்னுடைய கணவர் என பொதுவெளியில் பகிர்ந்து வந்தார். இது தொடர்பாக நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.

இப்படி இருக்க தற்போது ரங்கராஜ்- ஜாய் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

ஜாய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரங்கராஜ் தனக்கு குங்குமம் வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இருவரையும் அறிந்த சிலரிடம் நாம் பேசிய போது, கடந்த சில வருடங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர் என்றும் தற்போது ஜாய் தாய்மை அடைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

``முதல்வரின் மருத்துவ அறிவின் மீது நம்பிக்கை இருக்கிறது" - முதல்வரை சந்தித்த பிறகு கவிஞர் வைரமுத்து

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனலாக பேசிய பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவான 'தலைவன் தலைவி' படம் நேற்று (ஜுலை 25) திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, நித்... மேலும் பார்க்க

``ராஜ்ய சபாவில் உங்களுக்கே உரிய குரலில்..'' - எம்.பி கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதியின் அன்பு வாழ்த்து

மதுரையில் 2018 பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய திரைக் கலைஞர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல... மேலும் பார்க்க