ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும் உற்சவராக காலசம்ஹார மூர்த்தியும் அருள் பாலித்து வருகிறார்கள்.
காலசம்ஹார மூர்த்தியின் அருகில் அகத்திய முனிஸ்வரர் பூஜை செய்யப்பட்ட அமிர்தகடேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
முற்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்றபோது முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும் இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறி இக்கோயிலில் அமிர்தகடேஸ்வரராக அருள் பாலிப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.
அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவில் அருள் பாலிக்கிறார்.
தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.
இக்கோவில் எமம் பயம் போக்கி ஆயுள் விருத்தி அருளும் தளமாகும். 59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபாடுகிறார்கள்.
60 வயது முடிந்து 61 வது வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கின்றனர், 70 வயது முடிந்து 71 வயது தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயது கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகம் செய்து அமிர்தேடேஸ்வரரை வழிப்படுகிறார்கள்.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா 10- நாட்கள் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 19 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், விழா நாட்களில் வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அபிராமி, சண்டிகேஸ்வரர், விநாயகர் சாமிகள் எழுந்தருளி செய்து வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலை 9 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுமார் 11 மணி அளவில் கோயில் நான்கு வீதிகளின் வழியாக தேர் வளம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை செயலாளர் விருதகிரி, கோயில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிக்க | பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!