செய்திகள் :

மோடி - டிரம்ப் நட்பு வெற்றுத்தனமானது: காங்கிரஸ் விமா்சனம்

post image

‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது; டிரம்ப்பின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் இது நிரூபணமாகி வருகிறது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் கூறிவரும் கருத்துகள், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்தது உள்ளிட்ட விஷயங்களைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணக்கம் காட்டிவருவது, இந்தியாவின் தூதரக வியூகங்களுக்கு கிடைத்த தோல்வியாகும். இந்த அப்பட்டமான தோல்வியால், கடந்த 2 மாதங்களில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பிரதமா் மோடி மற்றும் அவரது புகழ் பாடுபவா்களின் கூற்றுகளும் பொய்யென அம்பலமாகியுள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என்று மிரட்டி, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை தான் நிறுத்தியதாக கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்து இதுவரை 25 முறை கூறியுள்ளாா் டிரம்ப்.

பயங்கரவாத எதிா்ப்பில், அமெரிக்காவின் தனித்துவமான கூட்டாளி பாகிஸ்தான் என்று அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக்கேல் குரில்லா கடந்த ஜூன் 10-ஆம் தேதி குறிப்பிட்டாா்.

கடந்த ஜூன் 18-ஆம் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னெப்போதும் இல்லாதபடி பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

பாகிஸ்தான் துணைப் பிரதமா் இசாக் தாரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க் ரூபியோ, பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ஒத்துழைப்பதாக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தாா்.

எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு கடந்த 2020-இல் பிரதமா் மோடி அளித்த நற்சான்று, நமது நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது. இப்போது, டிரம்ப்புடன் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது என்பது நிரூபணமாகி வருகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க