ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ளை
விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ளது புதுப்பட்டி கிராமம். அங்கு பெருமாள் என்பவரது மகன்கள் கருணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதில், ராதகிருஷ்ணன் சென்னை மெட்ரோவில் பணியாற்றி வருகிறார். கருணாமூர்த்தி புதுபட்டியில் விவசாய வேலை பார்த்து வருகிறார்.
கடந்த வாரம் விழாவிற்கு புதுப்பட்டி வந்த ராதாகிருஷ்ணன், தங்க நகைகள் சென்னையில் வைப்பதற்கு பயந்து பழைய வீட்டில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருணாமூர்த்தி இரவு புதிய வீட்டில் குடும்பத்துடன் உறங்கியுள்ளார். காலை எழுந்த பார்த்த போது இரண்டு வீட்டின் கதவும் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டில் 2 பவுன், ராதாகிருஷ்ணன் வீட்டில் 11 பவுன் 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரிக்கின்றனர்.
இதையும் படிக்க | திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்!