செய்திகள் :

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

post image

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர்கள் எச் ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். முன்னதாக பிரதமரின் வருகை குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பல லட்சம் கோடிக்கு அதிகமான திட்டங்களை நரேந்திர மோடி தந்துள்ளார்.

140 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்து, வந்தே பாரத் ரயில் போன்ற நிறைய திட்டங்களை தந்துள்ளார். பிரதமர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை அவர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது குறித்து கேட்டபோது, திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக இதை சொல்லி இருக்கிறார். நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவது புதிதல்ல, ஏற்கனவே பலமுறை இங்கு வந்துள்ளார்.

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

அமைச்சர் தங்கம் தென்னரசு கூட ராஜேந்திர சோழனின் புகழை உலகெங்கும் பரப்பியதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். உருட்டும் திருட்டும் உங்கள் பார்வை என்ன கேட்டதற்கு, அது திமுகவின் கொள்கையாக இருக்கிறது. தமிழக முதல்வர் முதலில் தமிழகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும். பிகாரை பற்றி கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அது தேர்தல் ஆணையத்தின் முடிவு. முதல்வர் நெருப்பாக இருக்கலாம். கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகளிடம் ஒரு முறையாவது கேளுங்கள் எங்களிடம் அடிக்கடி கேட்காதீர்கள்.

ஓபிஎஸ் பிரதமரை சந்திப்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்றார்.

BJP leader Nainar Nagendran has said that Chief Minister Stalin should first worry about Tamil Nadu.

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மை குறித்து திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில் கூறப்பட்ட கருத்து: வண... மேலும் பார்க்க

சிறுநீரக உறுப்பு தான முறைகேடுகள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை

சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவா்கள், இடைத்தரகா்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 7% குறைவு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதி: முதல்வா் உத்தரவு

கடலூரில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சே... மேலும் பார்க்க

தமிழக காங்கிரஸ் சாா்பில் ஆக.20-இல் விருது வழங்கும் விழா

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழக காங்கிரஸ் சாா்பில், தலைவா்களின் பெயரில் ஆக. 20-ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் ... மேலும் பார்க்க

பாமக தலைவா் அன்புமணி இரண்டாவது நாளாக நடைப்பயணம்

பாமக தலைவா் அன்புமணி இரண்டாம் நாளாக தனது நடைப்பயணத்தை சனிக்கிழமை தொடா்ந்தாா். தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை பாமக தலைவா் அன்புமணி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து வெள்ளிக்கிழமை தொடங... மேலும் பார்க்க