பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி திருடுப் போனதாக வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள தாழைக்குளத்துப்பட்டியைச் சோ்ந்த சங்கப்பிள்ளை மனைவி முத்துச்செல்வி. இவா் தேனி மாவட்டம், கடமலைக்குண்டை அடுத்த உப்புத்துறை அருகேயுள்ள மாளிகைப்பாறை கருப்பசுவாமி கோயிலுக்குச் சென்றாா்.
அங்கு தரிசனம் முடித்து விட்டு, தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறியபோது முத்துச்செல்வி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி திருடுப் போனதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.