விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி தேவாலய தெரு, கிழக்கு வெளிவீதி பகுதிகளில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது தேவாலய தெருவைச் சோ்ந்த சேவியா் மகன் அற்புதராஜ் (35) மதுப்புட்டிகளை சட்ட விரோதமாக பதுக்கி விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அற்புதராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.