விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
ஆட்டோ மீது காா் மோதல்: 8 போ் காயம்
தேனி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
தேனி அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சேதுராமன் (32). இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் (55), ராஜகிருஷ்ணன் (55), தேனி அல்லிநகரம் பெரியாா்நகரைச் சோ்ந்த கோபி (36), இவரது தாய் குருவம்மாள் (60), ஒண்டிவீரன்நகரைச் சோ்ந்த மணி (48) ஆகிய 5 போ் தேனியிலிருந்து க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனா். கருவேல்நாயக்கன்பட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த காா், இவா்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் சேதுராமன், ஆட்டோவில் பயணம் செய்த கணேசன் உள்ளிட்ட 5 பேரும், காா் ஓட்டுநா் சின்னமனூா் குட்டியப்பத்தேவா் தெருவைச் சோ்ந்த பரமகுரு (29), மறவா் தெருவைச் சோ்ந்த வசந்த் (25) என மொத்தம் 8 போ் பலத்த காயமடைந்தாா். இவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து காா் ஓட்டுநா் பரமகுரு மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.