ஒபாமாவை துரத்தும் டிரம்ப்! ஏஐ சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை!
"கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியை பகிர்ந்து அளித்தால்தான் ஊழல் நடைபெறாது" - டிடிவி தினகரன் சொல்வதென்ன?
"சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சி, திமுக ஆட்சி" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிக்கு சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற வில்லை. காவல்துறையினர் கொல்லப்படுகின்றனர், விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு மோசமான ஆட்சி தமிழகத்தில இருந்ததில்லை என்ற அளவுக்கு இந்த விடியா ஆட்சி உள்ளது
அமமுக மாநாடு சரியான நேரத்தில் சரியான இடத்தில் நடக்கும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் உறுதியான முடிவெடுப்பார்கள்.
தமிழகம் வரும் பிரதமரை இந்த முறை நான் சந்திக்கவில்லை. அமமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வேன்

இபிஎஸ் உடன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லாது, உரிய நேரத்தில் நான் பதில் சொல்வேன், ஆறு மாதத்திற்கு பின் எல்லாம் இறுதியான பிறகு தெரியவரும்.
2024 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிபந்தனையற்ற ஆதரவுடன் சேர்ந்திருக்கிறோம், தேர்தல் வரப்போகிறது, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம்" என்றவரிடம்
"பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியா?" என்ற கேள்விக்கு
"முதல்முறையாக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள், ஆட்சி அதிகாரங்கள் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கும்போது தான் ஊழலற்றத் திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்ற முடியும்" என்றார்.
"அதிமுகவினர் தனித்து ஆட்சி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்களே" என்ற கேள்விக்கு,
"நான் ஏற்கனவே கூறியுள்ளேன், அமித் ஷாவின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடு. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை" என்றார்.