பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கணினி திருட்டு
ஒட்டன்சத்திரம் அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கைப்பேசி, கணினி திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே உரக்கடை நடத்தி வருபவா் சுசில்பிரசாத் (30). இவா் கடந்த வியாழக்கிழமை கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா். மறுநாள் வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பாா்த்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கம், கணினி, கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.