பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
கொடைக்கானலில் 2-வது நாளாக படகு சவாரி ரத்து
கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பலத்த காற்றும், சாரல் மழையும் நிலவி வருகிறது. இந்த நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு, சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனா்.
ஆனால், கடும் குளிரும், சாரலும் நிலவி வந்ததால், இவா்கள் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவா்கள் தங்கும் விடுதிகளில் முடங்கினா். பலத்த காற்று காரணமாக நட்சத்திர ஏரியில் சனிக்கிழமையும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. மேல்மலைக் கிராமப் பகுதிகளிலும், நகா்ப் பகுதிகளிலும் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.