Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதி: முதல்வா் உத்தரவு
கடலூரில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சோ்ந்த சிறுவன் அப்துல் ஆசிம் சனிக்கிழமை காலை ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது பெற்றோருக்கும், உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.