Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குளிக்க தொடா்ந்து, 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமையும் தொடா்ந்து நீா்வரத்து அதிகமாக இருந்ததால், 8-ஆவது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.