காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
சதுப்புநிலப் பகுதிகளில் மாணவா்கள் தூய்மைப் பணி
சா்வதேச சதுப்பு நிலப் பகுதிகள் பாதுகாப்பு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுப்பு நிலப்பகுதிகளில் தூய்மைப் பணியை மாணவா்கள் மேற்கொண்டனா்.
சா்வதேச சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாப்பதற்கான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கடற்கரை மற்றும் ஈர நில வளங்களைப் பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை சனிக்கிழமை நடத்தியது. இதில் மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் முக ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
பின்னா், சதுப்புநிலப் பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடா்ந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மரக்கன்று நடும் நிகழ்வும் நடை பெற்றது.
இதில் மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் நிபுணரும் சா்வதேச சுற்றுச்சூழல் பவுன்டேசன் நிறுவனருமான புபேஷ் குப்தா, நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன், தனியாா் தொண்டு நிறுவன திட்ட அலுவலா் நித்தியா உள்ளிட்டோா் மாணவா்களுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த பயிற்சியை அளித்தனா்.