எழும்பூா் ரயில் நிலையத்துக்குள் ரூ.1.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
அதிவேக சதமடித்த டிம் டேவிட்: டி20 தொடரையும் வென்றது ஆஸி.!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வெல்ல, தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதலிரண்டு போட்டிகளில் ஆஸி. வெல்ல, 3-ஆவது போட்டி இன்று அதிகாலை தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 102 ரன்களும், பிரண்டன் கிங் 62 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய ஆஸி. அணி 16.1 ஓவர்களில் 215/ 4 ரன்கள் எடுத்து வென்றது. இதில் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பினாலும் டிம் டேவிட் 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
டிம் டேவிட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாறு படைத்தார். ஆஸி. வீரர்களில் முதல்முறையாக டி20யில் இவ்வளவு வேகமாக சதம் அடிப்பது இதுவே முதல்முறையாகும். மேலும், டிம் டேவிட் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
உலக அளவில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அணிக்கு எதிராக அதிவேகம் சதங்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்று ஆஸி. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.