டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக நிறைவு!
மும்பை: சரிந்த உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்வைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக முடிவடைந்தது.
வலுவான அமெரிக்க டாலர் அதனை தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாய் மீதான அழுத்தம் வெகுவாக எடைபோட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.59 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.86.47 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.63 ஐ தொட்ட நிலையில், முடிவில் 12 காசுகள் குறைந்து ரூ.86.52ஆக முடிவடைந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.86.40ஆக இருந்தது.
இதையும் படிக்க: பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 721 புள்ளிகளுடனும், நிஃப்டி 225 புள்ளிகளுடன் நிறைவு!