மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,973 கோடியாக உள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,403 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.16,945 கோடியிலிருந்து ரூ.18,721 கோடியாக உயா்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.15,039 கோடியிலிருந்து ரூ.16,283 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 3.77 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் (என்பிஏ) விகிதம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 3.01 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், நிகர வாராக் கடன் விகிதம் 0.39 சதவீதத்திலிருந்து 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.