சாதிவாரி கணக்கெடுப்பு: ``ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' - அன்புமணி க...
வெள்ளி சீராக வர்த்தகமான நிலையில் தங்கம் கிராமுக்கு ரூ.500 குறைவுடன் நிறைவு!
புதுதில்லி: உலக வர்த்தக பதட்டங்கள் தளர்ந்து பாதுகாப்பான புகலிடத் தேவை குறைந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் புதுதில்லியில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.500 குறைந்து ரூ.99,120 ஆக முடிவடைந்தது.
இது குறித்து அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்ததாவது:
99.9 சதவிகித தூய்மை தங்கம் நேற்று (வியாழக்கிழமை) 10 கிராமுக்கு ரூ.99,620 ஆக முடிவடைந்ததது.
அதே வேளையில் இன்றைய உள்ளூர் சந்தையில் 99.5 சதவிகித தூய்மை தங்கம் 10 கிராமுக்கு ரூ.500 குறைந்து ரூ.98,750 ஆகவும், அதே 10 கிராம் தூய்மை தங்கம் அதன் முந்தைய நாள் முடிவில் ரூ.99,250 ஆக முடிவடைந்தது. இது அனைத்து வரிகளும் உள்பட என்று தெரிவிக்கப்பட்டது.
வரி தொடர்பான கவலைகள் தளர்த்தப்பட்டதையடுத்து இன்று தங்கம் விலை மேலும் சரிந்து டாலர் எழுச்சி பெற்றது. வலுவான வேலை சந்தை காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதக் குறைப்புகளை தொடரும் என்ற எதிர்பார்ப்புகள் குறைந்தன.
இதற்கிடையில் வெள்ளி விலை இன்று கிலோ ஒன்றுக்கு ரூ.1,15,000 என ஒரே சீராக வர்த்தகமானது. அதே வேளையில் சர்வதேச சந்தைகளில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 20.72 டாலர் குறைந்து 3,347.94 டாலராக உள்ளது.
அமெரிக்கா - ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான வரி ஒப்பந்தங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட ஈர்ப்பைக் குறைத்து வருவதால் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,345 டாலராக வர்த்தகமானது.
உலகளாவிய அளவில், ஸ்பாட் வெள்ளி 0.35 சதவிகிதம் குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 38.92 டாலராக வர்த்தகமானது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக நிறைவு!