செய்திகள் :

பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 721 புள்ளிகளுடனும், நிஃப்டி 225 புள்ளிகளுடன் நிறைவு!

post image

மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிந்து முடிந்தன. நிதி, ஐடி மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகிய பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்பனை காரணமாக சென்செக்ஸ் 721 புள்ளிகள் சரிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 786.48 புள்ளிகள் சரிந்து 81,397.69 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 721.08 புள்ளிகள் சரிந்து ஒரு மாதத்திற்கும் மேலான குறைந்தபட்சம அளவான 81,463.09 புள்ளிகளுடனும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 225.10 புள்ளிகள் சரிந்து 24,837 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு முதலீட்டாளர்களின் மனநிலையைப் வெகுவாக பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிறுவனங்களின் முடிவுகள் மந்தமாக இருந்ததும், மந்தமான உலகளாவிய சந்தை ஆகியவற்றால் உள்ளூர் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்தனர்.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ் அதன் ஜூன் காலாண்டு வருவாய் அறிவிப்பிற்குப் பிறகு 4.73 சதவிகிதம் சரிந்தது. பவர் கிரிட், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், டிரென்ட், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை சரிவுடன் முடிந்த நிலையில் சன் பார்மா மற்றும் பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.2,133.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர். இருப்பினும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,617.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமான நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி உயர்ந்து முடிந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

இந்தியா - இங்கிலாந்து இடையே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது அடுத்த ஆண்டு தொடங்கி, இந்திய ஏற்றுமதிகளில் 99 சதவிகிதம் இங்கிலாந்தில் வரி இல்லாமல் நுழையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சந்தைப்படுத்துதல் மேம்படும் என்றும், இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கார்கள் மற்றும் விஸ்கி ஆகிய பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கான வரிகளை இந்தியா குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க வரிகள் மீதான தடை முடிவுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக வரும் இந்த ஒப்பந்தம், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான 56 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.32 சதவிகிதம் உயர்ந்து 69.40 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

5 போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் விமானங்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக த... மேலும் பார்க்க

வெள்ளி சீராக வர்த்தகமான நிலையில் தங்கம் கிராமுக்கு ரூ.500 குறைவுடன் நிறைவு!

புதுதில்லி: உலக வர்த்தக பதட்டங்கள் தளர்ந்து பாதுகாப்பான புகலிடத் தேவை குறைந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் புதுதில்லியில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன. தங்கத்தின் விலை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக நிறைவு!

மும்பை: சரிந்த உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்வைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக முடிவ... மேலும் பார்க்க

கரடி ஆதிக்கம்..! சென்செக்ஸ் 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் கடந்த 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும், நிஃப்டி 24,900 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 25) காலை நேற்றைப் போலவே இன்று... மேலும் பார்க்க

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க