செய்திகள் :

இந்தியாவில் நீரில் மூழ்கி பலியாகும் குழந்தைகள்! உலகளவில் 18% பெற்ற அவலம்!

post image

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் இந்தியாவில் 18 சதவிகித அளவில் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீரில் மூழ்கி இறப்பவர்கள் குறித்து தன்னார்வத் தொண்டு நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 3 லட்சம் பேர் நீரில் மூழ்கி இறக்கிறார்கள் என்று கூறுகிறது.

அவற்றில் 18 சதவிகித இறப்புகள் இந்தியாவில் நிகழ்வதாகவும், அந்த 18 சதவிகிதத்திலும் 17 சதவிகிதத்துக்கும் அதிகமான இறப்புகள் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்வதாகவும் ஆய்வு கூறுகிறது.

மேற்கு வங்கத்தில் 1.8 கோடி மக்கள்தொகை உள்ள நிலையில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 9,000-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 25 பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருப்பதுதான் பெருந்துயரம்.

நான்கு வயது வரையிலான குழந்தைகள், தங்கள் பெற்றோர் வேலையில் ஈடுபடும்போது துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி இறப்பதாகவும், நான்கு முதல் பத்து வயது வரையிலான குழந்தைகள் நீர்நிலகளில் விளையாடும்போதோ குளிக்கும்போதோ நீந்தும்போதோ மூழ்கி இறக்கின்றனர்.

பெரும்பாலான இறப்புகள் நண்பகல் முதல் பிற்பகல் 2 மணி வரையில் தங்கள் பெற்றோர் வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போதுதான் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.

இவ்வாறான விபத்து உயிரிழப்புகளின் பழிகள், உயிரிழந்தவர்களின் தாய் மீதுதான் சுமத்தப்படுகிறது.

இதையும் படிக்க:ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது இறுகும் விசாரணை!

25 die daily from drowning in West Bengal, half are children: new study finds

பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்

பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க