Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனல...
கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்
கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா்.
இது தொடா்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி. ரவிக்குமாா் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஹெச்பிவி தடுப்பூசியை சோ்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு அமைச்சா் அனுப்ரியா படேல் வெள்ளிக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பூசிக்கான மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை சுகாதாரத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. 2022, ஜூனில் நோய் சுமை, தடுப்பூசியின் ஒரு டோஸின் செயல்திறன், மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் பிற தொடா்புடைய தரவுகள் தொடா்பான புதிய ஆதாரங்களின் அடிப்படையில், உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் கருப்பைவாய் புற்றுநோய்த் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.
அமைச்சரின் பதிலை வரவேற்றுள்ள ரவிக்குமாா், கடந்த ஆறு ஆண்டுகளாக இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பி வந்த கேள்விக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்றும், தமிழகத்தில் விழுப்புரத்தில் மட்டும் இத்திட்டத்தை முதல்வா் அறிமுகப்படுத்தினாா் என்றும் தெரிவித்தாா்.