செய்திகள் :

கிரைம் திரில்லர் படத்தில் தான்யா ரவிச்சந்திரன்!

post image

நடிகை தான்யா ரவிச்சந்திரன் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள 'றெக்கை முளைத்தேன்' படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் கிராமத்து நட்பு, 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், 'சத்ரியன்' படத்தில் ஆக்‌ஷன், 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தில் கிராமத்து வீரம் மற்றும் 'செங்களம்' இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், 'றெக்கை முளைத்தேன்' படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.

இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் 'றெக்கை முளைத்தேன்' படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.

தான்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'றெக்கை முளைத்தேன்' படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், "இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் 'றெக்கை முளைத்தேன்'.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன்.

கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும்," என்றார்.

'றெக்கை முளைத்தேன்' படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார். பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார்.

'றெக்கை முளைத்தேன்' திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில் புதிய தடத்தை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடியில் கவனம் பெறும் மார்கன்!

விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் ஓடிடியில் கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக வெளியான மார்கன் திரைப்படத்தில், விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜ... மேலும் பார்க்க

கூடுதல் திரைகளில் தலைவன் தலைவி!

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில்... மேலும் பார்க்க

கோர்ட் ரீமேக்கில் பிரசாந்த்?

நடிகர் பிரசாந்த் தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ்... மேலும் பார்க்க

இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!

அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் ஆர்ஜென்டீன வீரர் ரோட்ரிகோ டீ பால் இணைந்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ரோட்ரிகோ டீ பால் (வயது 31) மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார். கடைசியாக அத்லெடிகோ மாட்ரிட் அண... மேலும் பார்க்க

தலைவன் தலைவி, மாரீசன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி, வடிவேலுவின் மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி... மேலும் பார்க்க