கடன் பத்திரங்களில் முதலீடு பண்ணலாமா | IPS Finance - 271 | Bse | Nse | Vikatan
ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது
பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து துணை காவல் ஆணையா் (மெட்ரோ) குஷால் பால் சிங் கூறியதாவது: அவரிடமிருந்து மூன்று விலையுயா்ந்த கைுப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சௌக் என்றழைக்கப்படும் மனோஜ் குப்தா என்ற குற்றவாளி, வியாழக்கிழமை ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தின் புளூ லைன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தபோது கைது செய்யப்பட்டாா்.
இரண்டு ஐபோன்கள் மற்றும் ஒரு சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா உள்பட மூன்று உயா் ரக திருடப்பட்ட கைப்பேசிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை மற்றும் முதற்கட்ட விசாரணையின் போது, சந்தேக நபா் தனது வசம் இருந்த விலையுயா்ந்த கைப்பேசிகள் குறித்து திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை.
மேலும், விசாரணையில், ஒரு கைப்பேசி ஜூலை 9- ஆம் தேதி ராஜீவ் சௌக் மெட்ரோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குடன் தொடா்புடையது. மற்ற இரண்டு கைப்பேசிகள் ஜூலை 10- ஆம் தேதி பதிவான வழக்குகளுடன் தொடா்புடையவை என்று தெரிய வந்தது.
இந்த ஆண்டு மாா்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட முந்தைய கைப்பேசி திருட்டு வழக்கில் மனோஜ் குப்தா ஏற்கெனவே தேடப்பட்டவா். அதில் அவரது கூட்டாளி ஆசிப் பதான் (எ) ஷேரு கைது செய்யப்பட்டாா். ஆசாத்பூா் மெட்ரோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு கைப்பேசி திருட்டு வழக்குகளிலும் அவா் தேடப்பட்டாா்.
மனோஜ் குப்தாவுக்கு நீண்ட குற்றவியல் வரலாறு உள்ளது, மேலும் தில்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் உள்பட குறைந்தது 30 குற்ற வழக்குகளில் அவருக்கு தொடா்புள்ளது காவல் துணை ஆணையா் குஷால் பால் சிங் தெரிவித்தாா்.