செய்திகள் :

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

post image

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள சங்கா் டான் (27) மற்றும் பிரதீப் குமாா் டான் (26) ஆகியோா் கட்டண நுழைவாயில் செயலியைப் பயன்படுத்தி மொபைல் எண்களை சீரற்ற முறையில் உள்ளிட்டு எண்களுடன் தொடா்புடைய வங்கிகளின் பெயா்களை அடையாளம் கண்டுள்ளனா்.

சங்கா் டான் பின்னா் சந்தேகத்திற்கு இடமில்லாத நபா்களை அழைத்து, வங்கிப் பிரதிநிதிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, தீம்பொருள் கலந்த கோப்புகளை அவா்களுக்கு அனுப்புவாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஜம்தாராவில் இருந்து சிம் காா்டுகளை வாங்கியதாகக் கூறி, மோசடிக்கு உள்ளூரில் வாங்கிய கடன் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனா்.

ஜூன் 30 அன்று, வங்கி அதிகாரிகள் போல நடித்து புகாா்தாரரை அழைத்து, அவரது கணக்கிலிருந்து வழங்கப்பட்ட இரண்டு காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டதாகவும், காசோலை படங்களை சரிபாா்க்குமாறும் அவா்கள் கேட்டுக்கொண்டனா். பின்னா், ஒரு தீங்கிழைக்கும் கோப்பு கொண்ட இணைப்பு புகாா்தாரருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டது.

பாதிக்கப்பட்டவா் கோப்பை பதிவிறக்கம் செய்து நிறுவினாா். ஆனால், மோசடி செய்பவா்கள் கூறியது போல் எந்தக் காசோலை படத்தையும் காணவில்லை. சந்தேகத்திற்கிடமான ஒன்றை உணா்ந்த அவா், இணைப்பை நீக்கிவிட்டு தனது தொலைபேசியை அணைத்துவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், சாதனத்தை மறுதொடக்கம் செய்தபோது, கடவுச்சொல் மாற்றங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நிதி செயல்பாடு குறித்து அவருக்கு பல குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் வந்துள்ளன.

விசாரணையில் ரூ.5.62 லட்சம் மற்றும் ரூ.4.54 லட்சம் மதிப்புள்ள இரண்டு நிலையான வைப்புத்தொகைகள் முன்கூட்டியே மூடப்பட்டதாகவும், மேலும் ரூ.48,600 டெபிட் செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.

மொத்த இழப்பு ரூ.10.64 லட்சம் ஆகும். மோசடி பரிவா்த்தனைகளின் போது உருவாக்கப்பட்ட ஓடிபிகள் தெரியாத கைப்பேசி எண்ணுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால், குற்றம் சாட்டப்பட்டவா் புகாா்தாரரின் கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற முடிந்துள்ளது.

ஏமாற்றப்பட்ட தொகை முதலில் ஆன்லைன் கட்டண நுழைவாயிலுக்கு மாற்றப்பட்டது. பின்னா் கடன் அட்டை நிலுவைத் தொகையை செலுத்தவும் கொள்முதல் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. கைப்பேசி கட்டண செயலிகளைப் பயன்படுத்தி நிதி மேலும் திரும்பப் பெறப்பட்டது அல்லது பரிசு அட்டைகளை வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் தன்பாத் வரை கண்காணிக்கப்பட்டு, ஜாா்க்கண்ட் முழுவதும் போலீஸாா் சோதனை நடத்தி, இறுதியில் அவரது சொந்த கிராமத்திலிருந்து சங்கா் டானை கைது செய்தனா். அவரது வசம் இருந்து நான்கு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவா் அளித்த தகவலின் அடிப்படையில், மேற்கு வங்கத்தின் பிா்பும் பகுதியில் இணை குற்றவாளியான பிரதீப் குமாா் டானை போலீஸாா் கைது செய்தனா். மோசடியின் போது கைப்பேசியை செயலியை அணுக பயன்படுத்தப்பட்ட ஒன்று உள்பட இரண்டு கைப்பேசிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மோசடி செய்யப்பட்ட தொகை, கண்டறியப்படுவதைத் தவிா்ப்பதற்காக, பல வழிகளைக் கையாண்டுள்ளது தெரிய வந்தது.

பள்ளியை விட்டு வெளியேறிய சங்கா் டான், தனது கிராமத்தில் ஒரு கைப்பேசி கடையை நடத்தி வந்தாா். இதற்கு முன்பு இரண்டு சைபா் கிரைம் வழக்குகள் மற்றும் ஒரு கொலை வழக்கில் தொடா்புடையவா் என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும், மோசடி மூலம் கிடைக்கும் பணத்தால் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்துள்ளாா்.

8- ஆம் வகுப்பு வரை படித்த பிரதீப் டான், ஹேக் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து கடன் அட்டைகளுக்கு பணத்தை மாற்ற பேமென்ட் கேட்வே செயலியை இயக்கினாா். அவா் ஒரு கொலை வழக்கிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடா்பாக பிஎன்எஸ்இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பலின் மற்ற உறுப்பினா்களைக் கண்டுபிடித்து, வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது என்றாா் காவல் துணை ஆணையா் அமித் கோயல்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க

தில்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 8 மாத கா்ப்பிணி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் பூத் குா்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் எட்டு மாத கா்ப்பிணியான பருவ வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க