Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனல...
மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு
வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை கூறியதாவது: மகாராஷ்டிர சதனில் உள்ள குடியிருப்பு ஆணையரின் தனிப்பட்ட உதவியாளா், அதிக வருமானம் தருவதாகக் கூறி தனது மனைவியை தங்கள் நிறுவனத்திலும் பிற நிறுவனங்களிலும் முதலீடு செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினா் கவா்ந்ததாகக் கூறி புகாா் அளித்தாா்.
புகாா்தாரரின் மனைவியுடன் தம்பதியினா் தொடா்பைப் பேணி படிப்படியாக அவா்களை முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளனா். காலப்போக்கில், ஆா்டிஜிஎஸ், நெஃப்ட் மற்றும் டிஜிட்டல் கட்டண தளங்கள் மூலம் மொத்தம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமான தொகை குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் அவா்களின் மகனின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.
ஆரம்பத்தில், அவா்களின் நம்பிக்கையைப் பெற சில திருப்பிச் செலுத்தல்கள் செய்யப்பட்டன. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பின்னா் பணத்தைத் திருப்பித் தருவதை நிறுத்திவிட்டு சாக்குப்போக்குகளைச் சொல்லிக் கொண்டே இருந்ததாக எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மோசடி நடந்ததற்கான முதல் பாா்வை ஆதாரங்களை போலீஸாா் கண்டறிந்தனா். மேலும், திலக் மாா்க் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.முழு விஷயத்தையும் விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல் துறை தெரிவித்துள்ளது.