Usurae Team Interview | Kamalhassan சார் Bigboss விட்டு வெளிய வரப்போ சொன்ன விஷயம...
பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?
பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு சென்றிருந்தார்.
பிரிட்டனுக்கு புதன்கிழமையில் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, இருவரும் சேர்ந்து, இந்திய வம்சாவளி ஒருவர் வழங்கிய தேநீரையும் அருந்தினர்.
இந்திய வம்சாவளியான அகில் படேலின் தேநீர் கடையில், ஸ்டார்மரும் மோடியும் சேர்ந்து தேநீர் அருந்தினர். அவர்களுக்கு தேநீர் வழங்கிய அகில் படேல், ``தேநீர் விற்பவருக்கு மற்றொரு தேநீர் விற்பனையாளர் தேநீர் வழங்குகிறார்’’ என்று நகைச்சுவையாகக் கூறினார்.
முன்னொரு காலத்தில், தான் தேநீர் விற்றதைச் சுட்டிக்காட்டிப் பேசியதைக் கேட்டு, பிரதமர் மோடியும் ஸ்டார்மரும் சிரித்தனர்.
பிரிட்டன் பயணத்தின்போது, வியாழக்கிழமையில் (ஜூலை 24) இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது.
இதையும் படிக்க:சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

Indian-origin Chaiwala who served PM Modi masala tea in UK